Close

e-KYC – PHH & AAY Beneficiaries Finger Print

Publish Date : 27/03/2025

செ.வெ.எண்:-72/2025

நாள்:-26.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகை பதிவினை e-KYC (electronic Know Your Customer) சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் 31.03.2025-க்குள் பதிவு செய்திட வேண்டும் என சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.