Close

E-Pass -kodaikanal

Publish Date : 03/10/2024

செ.வெ.எண்:-73/2024

நாள்:-30.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது.

எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம். மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 0451-2900233, 9442255737 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.