Close

EB – Solar Power

Publish Date : 23/12/2024

செ.வெ.எண்:-56/2024

நாள்:-20.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திடும் வகையில் விவசாய மின்மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.

பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் பொழுது ஏற்படும் மாசுபாட்டின் அளவினை குறைத்திட முடியும்.

நமது நாட்டினை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில் பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இயன்றவரை தங்களது விவசாய மின்மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்தி, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.