Close

Education Dept

Publish Date : 25/09/2025

செ.வெ.எண்:-96/2025

நாள்:-24.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

கல்வித்துறையில் மாநில அரசு செயல்படுத்தி வரும் சாதனைகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையிலும், சிறந்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயல்பாட்டாளார்களுக்கு பாராட்டு வழங்கவும், புதுமையான கல்வித்திட்டங்கள், டிஜிட்டல் கற்றல் மற்றும் திறன்மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும், மாணாக்கர்களுக்கான கல்வித் திட்டங்களான நான்முதல்வன், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 25.09.2025 அன்று மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில், நடைபெற உள்ளது.

மேற்காணும் நிகழ்ச்சியினை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவும், இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில், (25.09.2025) அன்று நடைபெறும் ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தமிழகஅரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறுமாறு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.