Election – DMCAE
செ.வெ.எண்: 61/2025
நாள்: 19.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு காலாண்டு ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(19.05.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் நோக்கமே மாற்றுத்திறனாளிகளின் பெயர்களை வாக்காளர்பட்டியல் சேர்ப்பது, அவர்களை வாக்குப்பதிவு செய்ய உரிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும். மேலும், மாற்றுத்திறனாளிகளின் தேர்தல் பங்கேற்பை மேம்படுத்த மேலும் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை மாநில அளவிலான கண்காணிப்புக்குழுவிற்கு SSCAF(State Steering Committee on Accessile Elections) பரிந்துரை செய்தல் போன்ற பணிகள் கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 19.05.2025 அன்றைய நிலவரப்படி சட்டமன்ற தொகுதி வாரியாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
127-பழனி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,76,121. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1,754. இதில் ஆண்கள் 1,019, பெண்கள் 734 மற்றும் மூன்றாம் பாலினம் 1 வாக்காளர்கள் உள்ளனர் . 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,40,841. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 2,681. இதில் ஆண்கள் 1,584, பெண்கள் 1,097 வாக்காளர்கள் உள்ளனர். 129-ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,96,355. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 2,335. இதில் ஆண்கள் 1,414, பெண்கள் 921 வாக்காளர்கள் உள்ளனர். 130-நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,50,473. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 2,305. இதில் ஆண்கள் 1,335, பெண்கள் 970 வாக்காளர்கள் உள்ளனர். 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,92,507. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 2,216. இதில் ஆண்கள் 1,302, பெண்கள் 914 வாக்காளர்கள் உள்ளனர். 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,85,109. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1,506. இதில் ஆண்கள் 901, பெண்கள் 605 வாக்காளர்கள் உள்ளனர். 133-வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,74,158. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 2,248. இதில் ஆண்கள் 1,351, பெண்கள் 897 வாக்காளர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 19,15,564 வாக்காளர்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 15,045 உள்ளனர். இதில் ஆண்கள் 8,906, பெண்கள் 6,138 மற்றும் மூன்றாம் பாலினம் 1 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கென சக்ஸாம்(Saksham) என்ற மொபைல் செயலியை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. இதன்மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், இடமாற்றம் செய்தல், திருத்தம் செய்தல், குரல் ஒலி உதவி, எழுத்திலிருந்து குரல் ஒலியாக மாற்றும் உதவி, பெரிய அளவிலான எழுத்து, வாக்குச்சாவடி அமைவிடம், தேர்தல் அலுவலர்களின் தொடர்பு எண்கள், தேர்தல் செயல்பாடு குறித்து புகார் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வுதள நடைபாதை வசதி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வரிசையில் நிற்காமல் விவரங்களை சமர்ப்பித்து வாக்களிக்கலாம். வாக்களிக்க உதவிபுரிய உடன் ஒருவரை அழைத்துச் செல்லலாம். மேலும், உதவிபுரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி, இலவச வாகன வசதி முதலியன வசதிகள் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் தேர்தல் பங்கேற்க செய்வதில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.