Close

Election – EVMs with Ballot Paper

Publish Date : 15/04/2024

செ.வெ.எண்:-26/2024

நாள்:-09.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் (Ballot paper) பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தமிழகத்தில் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 127-பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும், 1,31,304 ஆண் வாக்காளர்கள், 1,37,840 பெண் வாக்காளர்கள், 55 இதரர்கள் என மொத்தம் 2,69,199 வாக்காளர்களும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடிகளும், 1,14,093 ஆண் வாக்காளர்கள், 1,22,355 பெண் வாக்காளர்கள், 9 இதரர்கள் என மொத்தம் 2,36,457 வாக்காளர்களும், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், 1,39,872 ஆண் வாக்காளர்கள், 1,51,253 பெண் வாக்காளர்கள், 24 இதரர்கள் என மொத்தம் 2,91,149 வாக்காளர்களும், 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், 1,20,232 ஆண் வாக்காளர்கள், 1,25,504 பெண் வாக்காளர்கள், 16 இதரர்கள் என மொத்தம் 2,45,752 வாக்காளர்கள், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளும், 1,39,407 ஆண் வாக்காளர்கள், 1,46,052 பெண் வாக்காளர்கள், 67 இதரர்கள் என மொத்தம் 2,85,526 வாக்காளர்கள், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும், 1,35,188 ஆண் வாக்காளர்கள், 1,43,733 பெண் வாக்காளர்கள், 47 இதரர்கள் என மொத்தம் 2,78,968 வாக்காளர்கள் என மொத்தம் 1812 வாக்குச்சாவடிகளும், 7,80,096 ஆண் வாக்காளர்கள், 8,26,737 பெண் வாக்காளர்கள் 218 இதரர்கள் என மொத்தம் 16,07,051 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, 1812 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான 1812 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1812 கட்டுப்பாட்டு இயந்திரம், 1812 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர் பெயர் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் (Ballot paper) பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி, பழனி சட்டமன்ற தொகுதிக்கு பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்கு ஆத்துார் வட்டாட்சியர் அலுவலகத்திலும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர் பெயர் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் (Ballot paper) பொருத்தும் பணி அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் முன்னிலையில் உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.