Close

Election – Grievance Day Petition – Announcement

Publish Date : 19/03/2024

செ.வெ.எண்:-46/2024

நாள்:-16.03.2024

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச் செல்லலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.