Election – Meeting
செ.வெ.எண்:- 02/2025
நாள்:-01.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் எண் ECI/PN/235/2025, நாள்.26.06.2025 நாளிட்ட கடிதத்தில் உரிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்காணும் கடிதத்துடன் இணைத்து வரப்பெற்ற பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கபடாத அரசியல் கட்சியாக திண்டுக்கல் நகரம், குழந்தை வேலன் தெரு, அடியனுாத்து கிராமம், திண்டுக்கல் மெயின் ரோடு, அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 2019 முதல் அதாவது கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளின் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது. மேற்படி கட்சியின் தரப்பின் விளக்கத்தினை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக வருகின்ற 03.07.2025-ம் தேதியன்று பிற்பகல் 3.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் முன்னிலையில் நேரில் ஆஜராகி உரிய ஆதார ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமான விளக்கத்தினை அளிக்குமாறு தெரிவித்து சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவருக்கு சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி அரசியல் கட்சி பிரதிநிதி 03.07.2025-ம் தேதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், திண்டுக்கல் அவர்கள் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தவறும்பட்சத்தில் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை எனக்கருதி அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் பட்டியலின்படி முதற்கட்டமாக பட்டியலிலிருந்து அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சியினை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.