Election News (sign)
செ.வெ.எண்:-29/2025
நாள்: 07.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்களின் தகவல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இப்பணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு துறையில் பணிபுhpயக்கூடிய தன்னார்வலர்கள்(Volunteers) வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு உதவிட இரண்டு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று 07.11.2025 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மேற்படி கையெழுத்து இயக்கத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.செல்வன், வருவாய்த்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கையொப்பம் செய்து விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.