Close

Election – SVEEP March – Police

Publish Date : 15/04/2024
.

செ.வெ.எண்:-23/2024

நாள்:-08.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., முன்னிலையில் திண்டுக்கல் ரவுண்ட்ரோடுபுதுாரில் இன்று(08.04.2024) தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வரும் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைமுன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், பேரணி, மனித சங்கிலி என வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் எவ்வித அச்சம் இன்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சார்பில் அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல்லில் இன்று(08.04.2024) ரவுண்ட்ரோடுபுதுாரில் தொடங்கிய காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு, ராஜேந்திரா தியேட்டர், சிலுவத்துார் சாலை, எஸ்எம்பிஎம் பள்ளி சந்திப்பு, குமரன் திருநகர், பாய்ஸ் கிளப், திண்டுக்கல் ஸ்கேன் சந்திப்பு, ஜெபி ஹோட்டல் சந்திப்பு, திண்டுக்கல் பேருந்து நிலையம், திருவள்ளுவர் சாலை, எம்ஜிஆர் சிலை, காமராஜர் சிலை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, வடக்கு காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், ஒய்எம்ஆர் பட்டி சந்திப்பு, ஆர்த்தி திரையரங்கம் சாலை, நேருஜி நகர் ரவுண்டானா, ஆர்.எம். காலனி சாலை மற்றும் சந்திப்பு, குறுக்குச்சாலை வழியாக சென்று எம்விஎம் கல்லுாரி அருகில் முடிவடைந்தது.

இந்த அணிவகுப்பில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சிடின், காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் 500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.