Close

Election-Voter Application – Collector Inspection

Publish Date : 20/12/2024
.

செ.வெ.எண்: 46/2024

நாள்: 18.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு விண்ணப்பங்கள் அளித்த மனுதாரர் வீடுகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரடையாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு விண்ணப்பங்கள் அளித்த மனுதாரர் வீடுகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.12.2024) ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடையாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திக்கோம்பை, அம்பிளிக்கை, மண்டவாடி உட்பட பல்வேறு கிராமங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மனுதாரர் வீடுகளுக்கு நேரடையாக சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க திருத்தம் 2025-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2025-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் – 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம்–8, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை சேர்க்க படிவம் 6பி ஆகிய படிவங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக இன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் போன்றவற்றுக்கு மனு செய்த மனுதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகளை செம்மையாக மேற்கொள்ளவும், தகுதியுள்ள அனைவரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, தேர்தல் துணை வட்டாட்சியர் திரு.அன்சாரி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.