Close

Election – voter information slip – Distribution

Publish Date : 15/04/2024

செ.வெ.எண்:-20/2024

நாள்:-06.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்காளர் தகவல் சீட்டு 5,82,912 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வரும் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைமுன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 27.03.2024 தேதிப்படி வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி 04.04.2024 தொடங்கி 06.04.2024 வரை வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள விபரம் வருமாறு:-

127-பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும், 1,31,304 ஆண் வாக்காளர்கள், 1,37,840 பெண் வாக்காளர்கள், 55 இதரர்கள் என மொத்தம் 2,69,199 வாக்காளர்களில் 1,13,769 வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 42.26 சதவீதமும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடிகளும், 1,14,093 ஆண் வாக்காளர்கள், 1,22,355 பெண் வாக்காளர்கள், 9 இதரர்கள் என மொத்தம் 2,36,457 வாக்காளர்களில் 59,598 வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 25.20 சதவீதமும், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், 1,39,872 ஆண் வாக்காளர்கள், 1,51,253 பெண் வாக்காளர்கள், 24 இதரர்கள் என மொத்தம் 2,91,149 வாக்காளர்களில் 91,980 வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 31.59 சதவீதமும், 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், 1,20,232 ஆண் வாக்காளர்கள், 1,25,504 பெண் வாக்காளர்கள், 16 இதரர்கள் என மொத்தம் 2,45,752 வாக்காளர்களில் 90,185 வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 36.70 சதவீதமும், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளும், 1,39,407 ஆண் வாக்காளர்கள், 1,46,052 பெண் வாக்காளர்கள், 67 இதரர்கள் என மொத்தம் 2,85,526 வாக்காளர்களில் 73,068 வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 25.59 சதவீதமும், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும், 1,35,188 ஆண் வாக்காளர்கள், 1,43,733 பெண் வாக்காளர்கள், 47 இதரர்கள் என மொத்தம் 2,78,968 வாக்காளர்களில் 92,658 வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 33.21 சதவீதமும், 133- வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும், மொத்தம் 2,70,363 வாக்காளர்களில் 61,654 வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 22.80 சதவீதமும், என திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2121 வாக்குச்சாவடிகளில், மொத்தம் உள்ள 18,77,414 வாக்காளர்களில் 5,82,912 நபர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு 31.05 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. 13.04.2024-ஆம் தேதிக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டு வழங்கப்பட்டு பணிகள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் தகவல் சீட்டில், மாநிலம், சட்டமன்ற தொகுதி, வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம், தேர்தல் ஆணைய இணையதள முகவரி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன, என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.