Emp-DEO -SI
செ.வெ.எண்:-62/2025
நாள்:-23.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கையின்படி, காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக வளாகத்தில் 23.04.2025 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்தேர்வுக்கான மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.
எனவே, இப்போட்டித் தேர்விற்குத் தயாராகும் தேர்வர்கள் இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவுசெய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.