Employment – Indian Air Force – Rally
செ.வெ.எண்:-12/2025
நாள்:-06.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைநாடுநர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்விற்கான ஆட்சேர்ப்புப் பேரணி(ஆட்சேர்ப்பு முகாம்) (மருத்துவ உதவியாளர் பிரிவு) 28.01.2025 முதல் 06.02.2025 வரை நடைபெறவுள்ளது.
இப்பேரணியில், மருத்துவ உதவியாளர் (பொது) விண்ணப்பதாரர்களுக்கு 29.01.2025 அன்றும், மருத்துவ உதவியாளர் மருந்தாளர் விண்ணப்பதாரர்களுக்கு 04.02.2025 அன்றும் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, இத்தேர்விற்கான பதிவினை இணைய வழியாக 07.01.2025 முதல் 27.01.2025 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு https://airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
எனவே, இத்தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.