Close

Ex-Service man dept

Publish Date : 12/04/2025

செ.வெ.எண்:-34/2025

நாள்:-11.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் மூஞ்சிக்கல் முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்தை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் காலியாக உள்ள காவலர் (Watchman) பணியிடத்திற்கு மாத தொகுப்பூதிய அடிப்படையில் ரூ.10,000/-ற்கு பணியமார்த்திட திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 25.04.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண்.0451-2460086 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.