Close

EXwel – Grievance Day Petition

Publish Date : 20/12/2024

செ.வெ.எண்:-49/2024

நாள்:-18.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 24.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 24.12.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டைப் பிரதிகளில் முற்பகல் 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் பதிவு செய்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.