Exwel Grievance Day Petition
செ.வெ.எண்:-101/2025
நாள்:-26.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 36 பயனாளிகளுக்கு ரூ. 8,12,818 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.06.2025) நடைபெற்றது.
முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர் ஒருவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி ரூ.1,14,400 மதிப்பீட்டிலும், மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 5 நபர்களுக்கு ரூ. 30,600 மதிப்பீட்டிலும், தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகையாக 29 நபர்களுக்கு ரூ.6,40,000 மதிப்பீட்டிலும் மற்றும் வங்கிக்கடன் வட்டி மானியம் ஒரு நபருக்கு ரூ.27,818 மதிப்பீட்டிலும் என 36 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8,12,818 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சுயதொழில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தருங்கம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், முன்னாள் இராணுவத்தினர் மருத்துவமனை பொறுப்பு அலுவலர் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் திரு.வீரமணி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்(கூ.பொ.) திருமதி ச.சுகுணா, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் திரு.தி.செல்வம், முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.