EXWELDGL
Publish Date : 12/11/2025
செ.வெ.எண்:-45/2025
நாள்:-11.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 15.08.2023 அன்றைய சுதந்திர தின உரையில் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு திறன் பயிற்சி அளித்திடும் திட்டத்தினை அறிவித்ததின்படி, திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த 50 வயதிற்குட்பட்ட மறுவேலைவாய்ப்பு பெற்ற முன்னாள் படைவீரர்களை தவிர்த்து மற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளதால், திறன் பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களுடைய விருப்ப விண்ணப்பத்தினை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.