Close

Exwell – PM Scholarship Scheme (PMSS)

Publish Date : 09/09/2024

செ.வெ.எண்:-09/2024

நாள்:-05.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இணையதளம் வாயிலாக 30.11.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3000 வீதம் (ரூ.36,000/ஆண்டுக்கு) மற்றும் ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2,500 வீதம் (ரூ.30,000/ஆண்டுக்கு) என்ற வீதத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை முன்னாள் படைவீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்திடலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் www.ksb.gov.in என்ற முகவரியில் 30.11.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.