Close

Fisheries and Fishermen Welfare – Schemes

Publish Date : 24/06/2024

செ.வெ.எண்:-47/2024

நாள்:-22.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற்று மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுத்தல், புறக்கடை மற்றும் கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் உயிருள்ள (நேரடி) மீன் விற்பனை மையங்கள் அமைத்தல் திட்டம் போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும், ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.

மேற்கண்ட திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள் திண்டுக்கல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வ செய்யப்படுவர்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் “மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4-63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624001“ என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0451 – 2900148, மீன்வள ஆய்வாளர் கைபேசி எண்: 9751664565 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.