Close

Fisheries competition examination Coaching

Publish Date : 30/10/2024

செ.வெ.எண்:-75/2024

நாள்:30.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்விற்கான ஆயத்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள் 20 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் (www.fisheries.tn.gov.in) கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.11.2024 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0451-2900148 வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.