fly share world BMW Car Auction
செ.வெ.எண்:-97/2025
நாள்:-25.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகைச் செய்தி
மாண்பமை மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவில், மதுரை மாவட்டம் ‘FLY WORLD SHARES Pvt Ltd” நிறுவனம் முதலீட்டாளர்களிடம் தொகையினை பெற்று நிதி மோசடி செய்தது தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு–ஐஐ காவல் துறையினரால் வழக்கு எண் 4/2021 U/s 406, 420, 120-b,IPC மற்றும் Sec 5 of TNPID Act – தீர்ப்பின்படி எதிரிகளுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களான வாகனங்களை உரிய விலை நிர்ணயம் செய்த பிறகு பொது ஏலம் விட்டு தொகையினை சம்பந்தப்பட்ட வழக்கு கணக்கில் வரவு(Cash account) வைக்குமாறும் நீதிமன்ற தீர்ப்புரையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி நீதிமன்ற உத்தரவிற்கிணங்க நிறுவனங்களின் அசையும் சொத்துக்களான கீழ்கண்ட வாகனத்தை திண்டுக்கல் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 07.08.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்படவுள்ளது.
| வ.எண் | வாகன எண் | வாகன வகை | அடிப்படை விலை |
| 1. | TN- 69-BH-0001 Model 02/2015 |
Diesel BMW Car 3 Series GT with Auto TR | Rs 8,10,000/- (Rupees Eight Lakhs Ten Thousand Only ) |
வாகன விபரங்கள் மற்றும் ஏல நிபந்தனைகளை, மேற்படி அலுவலக டான்பிட் பிரிவில் தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.