FOREST DEPARTMENT
செ.வெ.எண்:-39/2025
நாள்:-15.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ம.மூ. கோவிலுார் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., அவர்கள் இன்று (15.10.2025) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வு 24.09.2025 முதல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில், நீர்நிலைககளின் கரையோரங்களில் தரிசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பனை விதை நடவு செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு 5 இலட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்ட நிகழ்வாக, தமிழ்நாடு வனத்துறை, திண்டுக்கல் வனக்கோட்டம் திண்டுக்கல் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக பனை விதை நடுவதற்கான தொடக்க விழா கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளி, ம.மூ. கோவிலுார் பள்ளியில் 15.10.2025 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. இந்த விழாவினை திரு. பு.மு. ராஜ்குமார், இ.வ.ப., மாவட்ட வன அலுவலர், திண்டுக்கல் வனக்கோட்டம், திண்டுக்கல் அவர்கள் தொடங்கி வைத்து முன்னிலை வகித்தார்.
மாவட்ட மேலும், பள்ளி மாணவர்களிடையே மரம் நடுவதன் முக்கியத்துவம் குறித்து உடையாற்றினார். மேலும், திருமதி. பெ. திலகவதி, திட்ட இயக்குநர்/ இணை இயக்குநர், வளர்ச்சி முகமை திண்டுக்கல், பள்ளி மாணவர்களிடையே சிறப்புறையாற்றினார். வருகை புரிந்த அனைவரையும் வரவேற்புரையாற்றி செல்வி. கு வேல்மணி நிர்மலா, உதவி வனப்பாதுகாவலர், திண்டுக்கல் அவர்கள் வரவேற்றார். விழாவின் போது 1600 மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழாவின்போது, பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து பள்ளியின் அருகில் அமைந்துள்ள சக்கம்பட்டி குளத்தில் 3000 பனை விதைகள் பள்ளியின் பசுமைப்படை, ஜீனியர் ரெட் கிராஸ், சாரணர்கள் சார்பில் 130 மாணவர்கள், மாவட்ட பசுமைத்தோழி மற்றும் வனச்சரக அலுவலர்கள் ஆகியோர் விதை நடவு செய்து விழாவினை சிறப்பித்தனர்.
நடவு செய்யப்பட்ட பனை விதைகளின் விபரங்களை udhavi app -ல் வனச்சரக அலுவலர்கள் பதிவேற்றம் செய்தனர்.
என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.