Close

Forest Green scheme

Publish Date : 28/10/2024
.

செ.வெ.எண்:-61/2024

நாள்:-25.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

திண்டுக்கல் வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கருத்தரங்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலர் திருமதி இரா.காஞ்சனா, இ.வ.ப., அவர்கள் பயிற்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் திரு.பு.முராஜ்குமார், இ.வ.ப., அவர்கள் விவசாயிகளுக்கு மரம் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார், வன விரிவாக்க அலுவலர் செல்வி கு.வேல்மணி நிர்மலா, வனச்சரக அலுவலர்கள் திரு.க.வெனிஷ், திரு.கா.பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளுக்கு மரம் வளர்ப்பு பற்றி விளக்கம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் வனக்கோட்டம் மற்றும் திண்டுக்கல் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச காலநிலை நடவடிக்கை தினம்-2024 (International Climate Action Day-2024) முன்னிட்டு விவசாயிகளுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை எதிர் கொள்ளவும், நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலநிலை மாற்றம் தொடர்பாகவும், பசுமை தீபாவளி கொண்டாடுவது தொடர்பாகவும் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் திருமதி அனிதா, திருமதி தாரணி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ, மாணவிகள் பசுமை தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ, மாணவிகள், திண்டுக்கல் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இந்நிகழ்சிசிகளில் முதலமைச்சரின் பசுமை தோழி செல்லி கார்த்திகா, வனத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.