Close

Goondas Act

Publish Date : 09/01/2025

செ.வெ.எண்:- 13/2025

நாள்:-06.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட 3 நபர்களை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், பொன்மாந்துறை கிராமம், 113/7, முத்தாலம்மன் கோவில் தெரு என்ற முகவரியைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரது மகன் ஜஸ்டின் ராஜா, (வயது 27), திண்டுக்கல் கிழக்கு வட்டம், பேகம்பூர், மேட்டுப்பட்டி, 403, 13வது தெரு என்ற முகவரியைச் சேர்ந்த அந்தோணி என்பவரது மகன் லியோ சார்லஸ்(வயது 32) மற்றும் திண்டுக்கல் கிழக்கு வட்டம், பேகம்பூர், மேட்டுப்பட்டி, 403, 13வது தெரு (தற்சமயம் இருப்பு) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கொடைரோடு, அம்மாபட்டி, வடக்குத் தெரு என்ற முகவரியைச் சேர்ந்த அந்தோணி என்பவரது மகன் பன்னீர்செல்வம்(வயது 28) ஆகியோர் 09.12.2024 அன்று திண்டுக்கல் தாலுகா காவல் வட்ட எல்லைப் பகுதியில் ஒரு நபரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த குற்றத்தின் அடிப்படையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தினரால் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஜஸ்டின் ராஜா, லியோ சார்லஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாவட்ட சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட வகையில் ஜஸ்டின் ராஜா, லியோ சார்லஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரை தடுப்புக்காவலில் வைத்து உத்தரவிடக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று மேற்படி ஜஸ்டின் ராஜா, லியோ சார்லஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரை தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஜஸ்டின் ராஜா, லியோ சார்லஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.