Goondas Act – 4 Persons
செ.வெ.எண்:-03/2024
நாள்:-05.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட 4 நபர்களை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் 28.09.2024 அன்று ஒரு நபரை முன் விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக, திண்டுக்கல் நகரம், முத்தழகுபட்டி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த திரு.ஜெயபாலன் என்பவரது மகன்கள் சைமன் என்ற சைமன் செபாஸ்டின்(வயது 23) மற்றும் எடிசன்ராஜ்(வயது 25), முத்தழகுபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த திரு.தனசாமி என்பவரது மகன் சச்சின் என்ற ரிச்சர்டு சச்சின்(வயது 25), வேடசந்தூர் வட்டம், மாரம்பாடி அருகே பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்த திரு.செபஸ்தியார் என்பவரது மகன் பிரவீன் என்ற பிரவீன் லாரன்ஸ்(வயது 29) ஆகியோர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தினரால் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரையும் தடுப்புக்காவலில் வைக்கக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று, சைமன் என்ற சைமன் செபாஸ்டின்(வயது 23), எடிசன்ராஜ்(வயது 25), சச்சின் என்ற ரிச்சர்டு சச்சின்(வயது 25), பிரவீன் என்ற பிரவீன் லாரன்ஸ்(வயது 29) ஆகிய 4 பேரையும் தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதையடுத்து, மேற்கண்ட 4 நபர்களும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.