Close

Group II Exam

Publish Date : 25/09/2025

செ.வெ.எண்:-101/2025

நாள்:-25.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற 28.09.2025 முற்பகல் திண்டுக்கல், கொடைக்கானல், நிலக்கோட்டை மற்றும் பழனி ஆகிய மையங்களில் உள்ள 61 தேர்வு கூடங்களில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 19,532 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். இத்தேர்விற்கு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் தேர்வு நாளான 28.09.2025 அன்று காலை 8.30 மணிக்குள் (Reporting Time) தேர்வு கூடத்திற்கு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் நுழைவதற்கான சலுகை நேரம் (Grace Time) காலை 09.00 மணி ஆகும். மேலும், காலை 9.00 மணிக்கு மேல் எந்த தேர்வரும் தேர்வுகூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இத்தேர்விற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.