Close

Heavy Rain Alert – Control Room Details

Publish Date : 14/10/2024

செ.வெ.எண்:-30/2024

நாள்:13.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டஆட்சியர் அலுவலகம் – 0451-1077, 0451-2400162, 0451-2400163, 0451-2400164, 0451-2400167, திண்டுக்கல் கிழக்கு, வட்டாட்சியர் அலுவலகம் – 0451-2471305, 9942828331, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம்-0451-2427304, 9445000579, நிலக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகம்–04543-233631, 9445000581 நத்தம், வட்டாட்சியர் அலுவலகம் – 04544-244452, 9445000580, ஆத்தூர், வட்டாட்சியர் அலுவலகம்- 0451-2556212, 9994523184, பழனி, வட்டாட்சியர் அலுவலகம் – 04545-242266, 9445000582, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் – 04553-241100, 9445000583, வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம்-04551-260224, 9445000584, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம்-04551-290040, 7395855390, கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகம்-04542-240243, 9445000585, பழனி சார் ஆட்சியர்-04545-242250, 9445000447, திண்டுக்கல் வருவாய் கேட்டாட்சியர்-0451-2432615, 0451-2432614, 9445000446, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர்-04542-240296, 9445000448 ஆகிய மேற்காணும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,

TN-Alert App இந்த செயலியை Google Play Store மற்றும் ios App Store-ல் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவல்/வானிலை முன்னெறிவிப்புகளைத் தமிழில் அறிந்து கொள்ளலாம். மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கான மழை முன்னறிவிப்பு தகவல்கள், அணைகளின் நீர்மட்டம்/பெய்த மழையின் அளவு, வெள்ளம் பாதிக்கும் வசிப்பிடப்பகுதிகள் குறித்த தகவல்கள், பேரிடர் தொடர்பான புகார் பதிவு/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளல், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.