Close

Horticulture-PMFBY – DLMC

Publish Date : 18/07/2024

செ.வெ.எண்:-49/2024

நாள்:-18.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, பயிர் காப்பீடு பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2024-25 ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் பிர்க்காக்களில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.

வாழை பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.61,997, பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.3,100, வெங்காயம் பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.37,495, பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.1,875, கத்தரி பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.18,080, பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.904, வெண்டை பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.14,079, பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.704, உருளைக்கிழங்கு பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.40,212, பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.2011, தக்காளி பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.20,304, பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.1,015 செலுத்தி விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயன் பெறலாம்.

மேலும் வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய 16.09.2024-ஆம் தேதியும் மற்றும் வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி பயிருக்கு 31.08.2024-ஆம் தேதியும் கடைசி நாள் ஆகும்.

எனவே விவசாயிகள் விண்ணப்பத்துடன் பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.