Close

Human rights Day – Pledge

Publish Date : 11/12/2024
.

செ.வெ.எண்:- 25/2022

நாள்:10.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(10.12.2024) மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் கலந்துகொண்டு உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

“இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யமாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.