Jamabhandhi 1434 Fasali (Kodaikkanal )
செ.வெ.எண்: 59/2025
நாள்: 19.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் 22.05.2025 அன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 22.05.2025 அன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் 22.05.2025 அன்று கொடைக்கானல் உள்வட்டத்திற்கு உட்பட்ட கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கொடைக்கானல் ஆகிய கிராமங்களுக்கும், 23.05.2025 அன்று பண்ணைக்காடு உள்வட்டத்திற்கு உட்பட்ட அடுக்கம், வெள்ளகவி, பூலத்தூர், வடகவுஞ்சி, பண்ணைக்காடு ஆகிய கிராமங்களுக்கும், 27.05.2025 அன்று தாண்டிக்குடி உள்வட்டத்திற்குட்பட்ட காமனூர், கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், தாண்டிக்குடி ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
இந்த ஜமாபந்தி நாட்களில் அந்தந்த உள்வட்டத்திற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களில் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கி பயன்பெறலாம், என கொடைக்கானல் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.