Kalaignarin Kanavu Illam Loan
செ.வெ.எண்:-57/2024
நாள்:-23.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளில் தகுதியுள்ளவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழக அரசின் சிறப்புத் திட்டமான கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் புதிய வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகள் சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் சிறப்புக் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கிக் கடன் வழங்குவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடன் வழங்கும் முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 23.10.2024 அன்றும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 23.10.2024 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை, ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24.10.2024 அன்று முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24.10.2024 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை, பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 25.10.2024 அன்று முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 25.10.2024 பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அன்று 28.10.2024 முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29.10.2024 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை, வேடசந்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29.10.2024 அன்று முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அன்று 04.11.2024 முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 05.11.2024 அன்று முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 05.11.2024 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 06.11.2024 அன்று முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 07.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 2.00 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளன.
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முகாம் நடைபெறும் தினங்களில் தகுதியான பயனாளிகள் வங்கி புத்தகம், பணி ஆணை, பயனாளியின் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் (அசல் மற்றும் நகல்) ஆஜராகி வங்கிக் கடன் பெற்று பயன் பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.