Kathar CEO Inspection
செ.வெ.எண்:-59/2024
நாள்:-12.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் திரு.வா.சம்பத், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் திரு.வா.சம்பத், இ.ஆ.ப., அவர்கள் 11.08.2025 மற்றும் 12.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் இன்று(12.08.2025) ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் கொள்முதல் செய்திடவும், கூட்டுறவு துறை மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து நியாய விலை அங்காடி மூலம் சோப்பு மற்றும் பனைவெல்லம் ஆகியவற்றை விநியோகம் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும், என தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் திரு.வா.சம்பத், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சுகந்தி இராஜகுமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.