Close

KODAI FESTIVAL-2024-Flower show

Publish Date : 28/05/2024

செ.வெ.எண்:-20/2024

நாள்:-18.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் கோடைவிழாவில் மலர்க்கண்காட்சியை தினமும் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி 17.05.2024 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 26.05.2024-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றன.

மலர்க்கண்காட்சியில் மலர்ச்செடிகளை வளர்த்து பூக்கள் பூத்துக்குலுங்கின்ற வகையில் உயிரூட்டமான மலர்ச்செடிகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. 42 வகையிலான மலர் வகைகளுடன் சுமார் 5 இலட்சம் மலர்களுடன் இந்த மலர்க்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மலர்க்கண்காட்சியை விழா நாட்களில் தினமும் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வரும் உதவியாளர் ஒருவர் ஆகியோருக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவர வசதியாக போதுமான அளவு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில். விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

கொடைக்கானலில் கோடை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.