Kodaikanal long Vehicle Transport Prohibited
செ.வெ.எண்:-18/2024
நாள்:-12.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப்புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரி அவர்களின் இசைவுடன் பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப்புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த அறிவிப்பு 18.11.2024 அன்று முதல் அமலுக்கு வருகிறது, என திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.