Mahalir thittam – GRC
செ.வெ.எண்:-31/2025
நாள்:-10.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
பாலின வள மையங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பாலின வளமையம் ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை மற்றும் வடமதுரை ஆகிய வட்டாரங்களில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த பாலின வள மையங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை களையவும், வழக்கறிஞர் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து செயல்படவும், பெண்கள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் சமூக தடைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் பாலின வள மையங்கள் செயல்பட்டு வருகிறது.
பாலின வள மையத்தில் புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி இணைப்பு உள்ளது. அதன்படி, ரெட்டியார்சத்திரம் -0451-2400195, குஜிலியம்பாறை-04551-293606, நிலக்கோட்டை-04543-293588 மற்றும் வடமதுரை-04551-294699 ஆகிய தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு புகார்கள் தெரிவிக்கலாம்.
இம்மையத்தில் பதிவு செய்யப்படும் பாலினம் தொடர்பான குற்றப்புகார்கள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஓஎஸ்எப்(OSF) மையத்திற்கு தொடர் நடவடிக்கைக்காக உரிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பாலின வள மைய மேலாளரிடம் பெண்கள், குழந்தைகள், குழந்தை திருமணம் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.