Makkaludan Mudhalvar Camp -2nd -final
செ.வெ.எண்:-59/2024
நாள்:-22.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 23.07.2024 முதல் 26.07.2024 வரை நடைபெறும் ஊராட்சிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று தொடங்கி வைத்தார்கள்.
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில், அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர்(முன்னோடி வங்கி) மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற ஊராட்சி பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024 வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு, 11.07.2024 முதல் 19.07.2024 வரை ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து, 23.07.2024 அன்று சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கம்பிளியம்பட்டி ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சி, ஆர்.சி.அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, வடமதுரை ஊராட்சி ஒன்றியம், தென்னம்பட்டி ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும், 24.07.2024 அன்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, நத்தம் ஊராட்சி ஒன்றியம், சிறுகுடி ஊராட்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாட்சி ஊராட்சியில், ஆர்.சி.பாத்திமா மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், 25.07.2024 அன்று தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கோரிக்கடவு ஊராட்சியில், சிஜிஎம் மேல்நிலைப்பள்ளி, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், கரிக்காளி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், பாச்சலூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சமுதாய கூடம் ஆகிய இடங்களிலும், 26.07.2024 அன்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அனுமந்தராயன்கோட்டை ஊராட்சியில், சமுதாய கூடம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், வக்கம்பட்டி ஊராட்சியில், ஆர்.சி.அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பட்டி ஊராட்சியில், புதுச்செட்டியூர் அழகாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
இம்முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.