Close

MAPERUM TAMIL KANAVU FUNCTION

Publish Date : 13/11/2025
.

செ.வெ.எண்:-47/2025

நாள்: 12.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சி காணல் நிகழ்வு நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் இன்று (12.11.2025) ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சி காணல் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் பங்கேற்ற மாணவ மாணவிகளின் தமிழ் பெருமித உரை நிகழ்வு நடைபெற்றது. மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தமிழின் தொன்மை, கீழடி அகழ்வாய்வு, இராஜேந்திர சோழன், மாபெரும் தமிழ்க்கனவு, உயர்கல்வி குறித்த காணொளி காட்சிகள் திரையிடப்பட்டன.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விளக்கம், இக்காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவின் ஆக்கத்தன்மை, செயற்கை நுண்ணறிவினால் உருவாக இருக்கும் தீமைகள், தீமைகளை நன்மைகளாக உருவாக்க நாம் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தமிழில் செயற்கை நுண்ணறிவின் நிலைப்பாடு ஆகியவை குறித்தும், வளப்படுத்திக்கொள்ள தமிழ் மொழியும் செயற்கை நுண்ணறிவு ஆற்றலும் குறித்த நிலைகளையும், செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை எதிர்கொள்வதன் மூலம் சமுதாயத்தைச் சிறப்பாகக் கட்டமைப்பது பற்றியும் “செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்வோம்” என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் அறிஞர் பொன்ராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

மாணவ, மாணவியர்கள் அனைவரும் எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்களை அப்படியே மனத்துள் உள்வாங்கிக் கேட்டுப் பயனடைந்தனர். மேலும், “செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்வோம்” என்னும் தலைப்பில் எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து மாணவ, மாணவியர்கள் வினாக்கள் எழுப்பினர். அதில் சிறந்த வினா எழுப்பிய ஐந்து மாணவர்களுக்கும், தமிழ் பெருமிதம் நூலில் இருந்து தனக்குப் பிடித்தத் தலைப்பில் சிறப்பாக பேசிய மாணாக்கர்களில் ஐந்து பேர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஜெயபாரதி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கேலின் அவர்கள், மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மற்றும் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் இ.சேனாவரையன், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் முனைவர் விஜயசக்ரவர்த்தி, திண்டுக்கல் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி, திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியர்களும் மற்றும் SBM பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் குழுவினரும் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.