Close

Medical Inspection

Publish Date : 18/11/2024
.

செ.வெ.எண்:-29/2024

நாள்:-14.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மருந்தகங்களில் போதைப்பொருள்கள் மற்றும் மெத்தப்பெட்டமைன் போன்ற போதை வஸ்துகள் ஏதும் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மருந்தகங்களில்(Medical Shops) போதைப்பொருள்கள் மற்றும் மெத்தப்பெட்டமைன் போன்ற போதை வஸ்துகள் ஏதும் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், திண்டுக்கல் உதவி ஆணையர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி தலைமையில் அலுவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் இன்று (14.11.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, உரிம விதிகளை மீறி உரிமதாரர்கள் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமம் இரத்து செய்யப்படுவதுடன், உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.