Close

Mental Health Establishment

Publish Date : 26/08/2025

செ.வெ.எண்:-101/2025

நாள்:-26.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு, தேசிய சுகாதார குழும திட்ட இயக்குநரின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

சென்னை -9, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, அரசு முதன்மை செயலாளரின் 28.07.2025 நாளிட்ட நே. மு.க. எண்: 8398164/எம்2/2025-1 மற்றும் தமிழ்நாடு, தேசிய சுகாதார குழும திட்ட இயக்குநரின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட 20 மனநல நிறுவனங்கள்/மையங்கள் (Mental Health Establishments) செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களை 5 குழுக்கள் மூலம் ஆகஸ்ட் 2025 முதல் செப்டம்பர் 2025ற்குள் இணை இயக்குநர் (நலப்பணிகள்), துணை இயக்குநர் (குடும்பநலம்), துணை இயக்குநர்(காசநோய்), துணை இயக்குநர் (தொழுநோய்), மாவட்ட மனநல மருத்துவர், துணை மனநல மருத்துவர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் மூலம் ஆய்வு செய்ய இருப்பதால் இதுவரை பதிவு செய்யப்படாத மனநல நிறுவனங்கள் /அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மன்றல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010. தொலைபேசி எண்: 044-26420965 Email-tnsmha@gmail.com

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php

மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மேற்காணும் இணையதள முகவரியிலோ தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 044- 2642- 0965 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்நிலையில், ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.