Close

Monday Grievance Day Petition

Publish Date : 09/01/2025
.

செ.வெ.எண்:-11/2025

நாள்:-06.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு ரூ.4.17 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(06.01.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையதினம், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கல்வி உதவித்தொகை பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை 3 பயனாளிகளுக்கும், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ஒரு பயனாளிக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 8 பயனாளிகளுக்கும் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.4.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு ரூ.7,000 மதிப்பிலான தையல் இயந்திரம் என மொத்தம் ரூ.4.17 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

ஒட்டன்சத்திரம் வட்டம், புளியூர்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பெரியகுழிப்பட்டி மற்றும் சின்னகுழிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடிநாள் நிதியாக ரூ.5,000-க்கான காசோலையை திரு.இராமசாமி மற்றும் திரு.தங்கராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.