Close

Monday Grievance Day Petition

Publish Date : 18/03/2025
.

செ.வெ.எண்:-49/2025

நாள்:-17.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 327 பயனாளிகளுக்கு ரூ.17.21 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.03.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 282 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையக் கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் இதர 16 நல வாரியங்கள் சார்பில் கல்வி உதவித்தொகை 295 பயனாளிகளுக்கு ரூ.5.51 இலட்சம் மதிப்பீட்டிலும், திருமண உதவித்தொகை 16 பயனாளிகளுக்கு ரூ.76,000 மதிப்பீட்டிலும், விபத்து மரணம் உதவித்தொகையாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1.30 இலட்சம் வீதம் ரூ.2.60 இலட்சம் மதிப்பீட்டிலும், இயற்கை மரண உதவித்தொகையாக 7 பயனாளிகளுக்கு தலா ரூ.35,000 வீதம் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், கண் கண்ணாடி உதவித்தொகை ஒரு பயனாளிக்கு ரூ.750, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1.01,800 வீதம் ரூ.5.09 இலட்சம் மதிப்பீட்டிலும், பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு ரூ.1.00 இலட்சம், என ஆக மொத்தம் 327 பயனாளிகளுக்கு ரூ.17.21 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த விடுதிக் காப்பாளர் மற்றும் காப்பாளினி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சின்னாளப்பட்டி அரசுப் பள்ளி மாணவியர் விடுதி காப்பாளினி திருமதி ரெ.சித்ராவுக்கு முதல் பரிசு ரூ.10,000, கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், கன்னிவாடி அரசு பள்ளி மாணவியர் விடுதி காப்பாளினி திருமதி நா.தவமணிக்கு இரண்டாம் பரிசு ரூ.5,000, கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், காசிப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் திரு.க.காளிமுத்துவிற்கு மூன்றாம் பரிசு ரூ.3,000, கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆகியற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, தொழிலாளர் உதவி ஆணையாளர் திரு.ஆர்.ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.மொ.கு.அன்பழகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கவேலு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.