Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-52/2025
நாள்:-14.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(14.07.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 328 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், நீரில் மூழ்கி உயிரிழந்த பிரகாஷ் என்பவரின் தாயார் திருமதி கலைச்செல்வி என்பவருக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.3.00 இலட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு நாள் விழாவை(ஜூலை 18-ஆம் தேதி) முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 10.07.2025 அன்று நடைபெற்றன. இதில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு நல்லாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ர.ஜெகதாஸ்ரீ, இரண்டாம் பரிசு சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மீ.ரா.பிரீத்தா, மூன்றாம் பரிசு திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா மேனிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி பா.த.வினய விகாசினி, பேச்சுப்போட்டியில் முதல் பரிசு செக்காபட்டி அரசு மேனிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி இர.முத்துமீனாட்சி, இரண்டாம் பரிசு திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேனிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர் கோ.ஜீவா, மூன்றாம் பரிசு நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி செ.முனிஸ்கா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வகையில் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு.பெ.இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.