Close

Monday Grievance Day Petition

Publish Date : 22/07/2025
.

செ.வெ.எண்:-69/2025

நாள்:-21.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.07.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 340 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், ஆட்டோ தொழிலாளர் நல வாரியம் சார்பில் கல்வி உதவித்தொகை 58 பயனாளிகளுக்கு ரூ.1.26 இலட்சம் மதிப்பீட்டிலும், திருமண உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு ரூ.16,000 மதிப்பீட்டிலும், விபத்து மரணம் நிவாரணத் தொகை ஒரு பயனாளிக்கு ரூ.2.05 இலட்சம் மதிப்பீட்டிலும், இயற்கை மரணம் நிவாரணத் தொகை 6 பயனாளிகளுக்கு ரூ.2.70 இலட்சம மதிப்பீட்டிலும், கண்கண்ணாடி ஒரு பயனாளிக்கு ரூ.750 மதிப்பீட்டிலும், பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆட்டோ வாங்குவதற்கான மானியத்தொகை ரூ.1.00 இலட்சம் என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.7.18 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புக்கான போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்.மிதிலேஷ்ராம், பி.கே.வி.நிரஞ்சன், எஸ்.யாதர்ஷ், ஜி.பி.ஹரிபிரசாந்த், வி.சபரிஜீவிதன் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் திருமதி பி.பிரதீபா ஆகியோர் கொண்ட குழுவினருக்கு “பல்நோக்கு விவசாய கருவி“ கண்டுபிடித்ததற்காக முதல் பரிசாக ரூ.1.00 இலட்சம் வழங்கப்பட்டது. மேலும், லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏ.திவாகரன், திரு.எம்.கவின்குமார், திரு.கே.புகழேந்தி, இ.நந்தகுமார் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் திருமதி எஸ்.கவிதா ஆகியோர் கொண்ட குழுவினருக்கு “இருக்கையுடன் கூடிய பயணப்பெட்டி“ கண்டுபிடித்ததற்காக இரண்டாம் பரிசாக ரு.50,000 வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி உஷா, மாவட்ட சுற்றுச்சூழல் (ECO) ஒருங்கிணைப்பாளர் திரு.ஏ.ஹரிகரசுதன், மாவட்ட திட்ட அலுவலர்(தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.ஏ.சையது அப்துல் காதர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.