Monitoring Officer Inspection and Meeting
செ.வெ.எண்:-26/2025
நாள்:10.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்து துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று(10.01.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், குடிநீர் திட்டங்கள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வழகிழக்கு பருவமழை, பட்டா வழங்கப்பட்ட விபரங்கள், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மாங்கரை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணிகள், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மாங்கரை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம், காப்பிளியப்பட்டியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணிகள், கே.புதுக்கோட்டையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரக்கன்றுகள் வளர்ப்பு கூடாரம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியபட்டி ஊராட்சியில் பெஞ்ஜால் புயல் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட இடங்கள், தங்கச்சியம்மாபட்டியில் உலர்களம் ஆகியவற்றை மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மருத்துவர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் திருமதி பெ.திலகவதி, பழனி சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பி.சிவராம், மாநகராட்சி ஆணையாளர் திரு.இரா.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, வேணாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.ஏ.பாண்டியன், வேளாண்மை துணை இயக்குநர் திரு.ஏ.காளிமுத்து, உதவி இயக்குநர் திருமதி சந்திரமாலா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.பாண்டியராஜன், செயற்பொறியாளர் திரு.சக்திமுருகன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.அனிதா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.