Close

Naanmuthalvan – 32,716 Students Benefited

Publish Date : 05/06/2024

பத்திரிகைச் செய்தி

“நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து நல்வாய்ப்புகளையும், உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ. மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்பது குறித்தும், தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும். நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன். உடற்பயிற்சி, நடை உடை நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்ப்பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வாயிலாக Data Engineering, (டேட்டா இன்ஜினிரிங் Genomic Mastery (ஜினோமிக் மாஸ்டரி, PCR Technology பிசிஆர் தொழில்நுட்பம்), Plant Tissue Culture, Algal Technology, Graphic Design, ரோபோட்டிக்ஸ் (Robotics), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning). இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things), கிளவுட் கணினிமுறை அடிப்படைகள் (Cloud Computing), தொழில் 4.0. (Industry 4.0) சைபர் பாதுகாப்பு (Cyber Security), பெருந்தரவு ஆய்வு (Big Data Analytics), ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (Augmented Reality), விர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality), ஸ்மார்ட் எனர்ஜி கிரிட்(Smart Energy Grid), பிளாக்செமின் டெவலப்மன்ட் (Block Chain Development), நீடித்த கட்டுமான வடிவமைப்பு (Sustainable Building Design), மின்சார வாகனத்துறை (Electrical Vehicle) செயற்கை அறிவு தொழில் நுட்பத்தின் உன்னத வடிவமான Chat GPT, 5G தொழில்நுட்பம் போன்ற நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் தொடங்கப்பட்டு ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 28 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திறன் பயிற்சி முடித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,14,519 ஆகும். இவற்றுள் இறுதியாண்டு பொறியியல் பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 85,053 மாணவர்களில் 65,034 மாணவர்களும், இறுதியாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 99,230 மாணவர்களில் 83,223 மாணவர்களும் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவற்றுள் “நான் முதல்வன்” திட்டத்திற்கென்று பிரத்தியேகமாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் கலை அறிவியல் கல்லூரிகளில் 20,082 மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 5,844, என மொத்தம் 25,926 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

“நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 35 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 8 பொறியியல் கல்லுாரிகள், 10 தொழிற்பயிற்சி நிலையங்கள், 13 தொழில்நுட்பக் கல்லுாரிகளில் இருந்துது மொத்தம் 36,022 மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

“நான் முதல்வன்“ திட்டம் போட்டித்தேர்வு பிரிவின் மூலம் 35 மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்எஸ்சி(SSC), வங்கி போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்பட்டதில் 150 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

“நான் முதல்வன்“ திட்டத்தில் கல்லுாரிக் கனவு கருத்தரங்கு மூலம் இந்த ஆண்டு பள்ளி கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு மூலம் 1506 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

“நான் முதல்வன்“ திட்டத்தில் வழங்கப்பட்ட உதவித்தொகை மூலம் பயிற்சி பெற்ற 3 பேர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் மொத்தம் 37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.