Close

NLEP SLAC-2025 and LCDC

Publish Date : 22/01/2025

செ.வெ.எண்:-41/2025

நாள்:-21.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் நோயாளிகள் கண்டறியும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30-ஆம் நாள் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பர்ஷ் (தொட்டு அரவணைத்தல்) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் 30.01.2025 முதல் 15.02.025 வரை நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் அதிகம் தொழுநோய் தாக்க விகிதம், புதிய குழந்தை நோயாளி, இரண்டாம் நிலை ஊனத்துடன் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகள் காணப்படும் வட்டாரம், நகரப் பகுதிகளில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணி (Leprosy Case Detection Campaign) மேற்கொண்டு புதிய தொழுநோயாளிகள் எவரும் விடுபடா வண்ணம் 13.02.2025 முதல் 28.02.2025 வரை வீடு வீடாக தொழுநோய் கண்டுபிடிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இம்முகாம்களில், அனைத்து கிராம ஊராட்சிகள், அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், அரசு அலுவலகங்கள், தனியாh; அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டுபிப்பு பணிகள், மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் சிறப்பு தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்துதல், சிறப்பு ஊனத்தடுப்பு முகாம்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று தொழுநோய் அறிகுறிகள் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக தன்னார்வர்கள் மூலம் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணி 13.02.2025 முதல் நடைபெற உள்ளது.

எனவே, தொழுநோய் இல்லா திண்டுக்கல் மாவட்டம் என்ற நிலையை அடைய தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டுபிடிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.