Organ Donation
செ.வெ.எண்:-27/2025
நாள்:-08.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடல் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கருங்கல் கிராமம் (உட்கடை) சின்னத்தம்பிபட்டியைச் சேர்ந்த திரு.கோபிநாதன் த/பெ.பாலகிருஷ்ணன் (வயது-27) என்பவர் 06.07.2025 அன்று மூளைச்சாவு ஏற்பட்டு இன்று இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அன்னாரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
அன்னாரின் இறுதி சடங்கில் பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் நேரில் சென்று மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த திரு.கோபிநாதன் அவர்களின் உடலுக்கு, தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் திரு.மு.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.