Pensioner Grievance Day Petition
செ.வெ.எண்:-47/2025
நாள்:-23.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.02.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சென்னை கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கூடுதல் இயக்குநர் (திட்டங்கள்) ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட முகவரி, கடைசியாகப் பணிபுரிந்த துறை/அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், கொடுப்பாணை எண், பெறப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை தங்கள் தொலைபேசி/கைபேசி எண்களுடன் (இரு பிரதிகளில்) 05.02.2025-ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவர்களிடம் விண்ணப்பம் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.