PM Kisan
செ.வெ.எண்:-59/2019 நாள்:27.06.2019
திண்டுக்கல் மாவட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM KISAN) திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மாவட்டதில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் நாளை 28.06.2019 முதல் 30.06.2019 வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
விவசாயிகள் பயன்பெறும் விதமாக மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஉதவித்திட்டம் (PM KISAN) கடந்த 24.02.2019-ம் நாள் முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிபெற்றவர்கள் ஆவார்கள்.
மேலும், விவசாயிகளில் தங்களது பெற்றோர் இறந்த நிலையில் பெற்றோரின் பெயரில் நிலங்களுக்குரிய பட்டா வழங்கப்பட்டிருப்பின், இறப்புச்சான்று மற்றும் வாரிசுசான்று ஆகியவற்றினை அளித்து வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மேற்குறிப்பிட்டவாறு பிரதம மந்திரி கிசான் சம்மான்நிதி (PM KISAN) திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை தவிர்த்து மீதமுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகின்ற 28.06.2019 (வெள்ளிக்கிழமை), 29.06.2019 (சனிக்கிழமை) மற்றும் 30.06.2019 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும், இம்மூன்று தினங்களில் குக்கிராமங்கள் வாரியாக நியமனம் செய்யப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் வீடு தேடி வந்து கணக்கெடுப்பு செய்ய உள்ளனர்.
எனவே, மேற்படி சிறப்பு முகாம் நடைபெறவுள்ள மூன்று நாட்களில், கடந்த (21.06.2019, 22.06.2019, 23.06.2019) கணக்கெடுப்பின் போது நடைபெற்ற சிறப்பு முகாம்களின் போது விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள முகாம்களில், தங்களது அசல் ஆதார் அட்டை, நடப்பு வங்கி கணக்கு புத்தகம், ஸ்மார்ட் கார்டு (குடும்ப அட்டை) மற்றும் நிலம் தொடர்பான விபரங்களை சிறப்பு முகாம்களில் அளித்தும் மற்றும் வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளரிடம் அளித்தும் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.